இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் பார்ட்டிகேட் விவகாரம் தொடர்பாக, தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
போரிஸ் ஜான்சன் கடந்த 2019-ம் ஆண்டு பிரிட்டன் பிரதமராக பதவியேற்றார். அந்த ஆண்டு இறுதியில் சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று ஓரிரு மாதங்களிலேயே பிரிட்டன் மோசமான கொரோனா பாதிப்புகளை சந்தித்தது. இரு தவணை தடுப்பூசிக்குப் பின்னரும் அங்கு கொரோனா பாதிப்பு குறையவில்லை.
கொரோனா பெருந்தொற்று உச்சத்தில் இருந்த போது, அப்போது இங்கிலாந்து பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் விதிகளை மீறி அவரது வீட்டில் பிரம்மாண்டமாக பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதனை எதிர்கட்சிகள் இதை விமர்சனம் செய்ததோடு, போரிஸ் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதன்பின் நாடாளுமன்றத்தில் தனது செயலுக்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் மன்னிப்பு கேட்டார். கொரோனா கட்டுப்பாடுகளை மீறியதாக போரிஸ் ஜான்சனுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.
இதனை தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான நாடாளுமன்ற உறுப்பினர் கிரிஷ் பின்சருக்கு துணை தலைமை கொறடா பதவி வழங்கப்பட்டது அந்நாட்டில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதன்காரணமாக அவரது அமைச்சரவையில் இருந்த நிதியமைச்சர் ரிஷி சுனக் மற்றும் சஜித் ஜாவத் உள்ளிட்டோர் தனது பதவியை ராஜிநாமா செய்தனர்.
இதையடுத்து கன்சர்வேடிவ் கட்சி தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாகவும், தனது பிரதமர் பதவியையும் ராஜிநாமா செய்வதாகவும் போரிஸ் ஜான்சன் தெரிவித்தார். இந்நிலையில், நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்தியதால் அவர் பத்து நாள்கள் வரை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராஜிநாமா செய்ய விசாரணைக் குழு பரிந்துரை செய்திருந்தது. இதன் காரணமாக, தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் அவர் ராஜிநாமா செய்துள்ளார்.
ராஜிநாமா குறித்து போரிஸ் ஜான்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”விசாரணை குழுவிடம் இருந்து கடிதம் கிடைத்தவுடன், எனக்கு எதிரான நடவடிக்கைகளைப் பயன்படுத்தி என்னை நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றுவது உறுதியாகியுள்ளது. நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறுவது மிகவும் வருத்தமாக உள்ளது. இது தற்காலிகமானது தான்” என்று அவர் கூறினார்.







