வெயில் கோர தாண்டவம் – பாட்னாவில் ஜூன் 24 வரை பள்ளிகள் மூடல்!

வெப்ப அலை காரணமாக பீகார் மாநிலம் பாட்னாவில் வரும் 24-ம் தேதி வரை பள்ளிகள் மூடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. நாட்டில் பல்வேறு மாநிலங்களில் கோடை வெயில் இன்னும் வாட்டி வருகிறது. இந்நிலையில் பீகார்…

வெப்ப அலை காரணமாக பீகார் மாநிலம் பாட்னாவில் வரும் 24-ம் தேதி வரை பள்ளிகள் மூடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

நாட்டில் பல்வேறு மாநிலங்களில் கோடை வெயில் இன்னும் வாட்டி வருகிறது. இந்நிலையில் பீகார் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் வெப்ப அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே கடும் வெயிலின் காரணமாக பாட்னா மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு ஜூன் 18-ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தது. பாட்னா மாவட்டத்தின் அனைத்து தனியார், அரசுப் பள்ளிகளும் இந்த உத்தரவை பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வெப்ப சலனம் இன்னும் நீடிப்பதால் ஜூன் 18-ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டிருந்த பள்ளிகள் திறப்பு தற்போது ஜூன் 24-ம் தேதி வரை நீட்டிக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. மழலையர் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசு, தனியார் என அனைத்து பள்ளிகளுக்கும் இது பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.