பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது!

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். முதுகுளத்தூரில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளியில், அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வரும் ஹபீப்…

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

முதுகுளத்தூரில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளியில், அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வரும் ஹபீப் என்பவர், மாணவிகளின் செல்போன் எண்களை வாங்கி வைத்துக் கொண்டு, அவர்களிடம் ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும், புத்தகத்தை எடுத்துக் கொண்டு தமது வீட்டிற்கு வருமாறும், அப்படி வர மறுத்தால், மதிப்பெண் குறைவாக போட்டு தேர்ச்சியடையாமல் செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார்.

இதைபோல் பல மாணவிகள் தமது வீட்டிற்கு வந்துள்ளதாகவும், அதுபோல் நீயும் வர வேண்டும் என்றும் ஹபீப் ஒரு மாணவியுடன் பேசும் ஆடியோ பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதற்கிடையே, பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் ஆசிரியர் ஹபீப் மீது புகார் அளித்துள்ளார். அதன் மீது விசாரணை மேற்கொண்ட போலீசார், ஆசிரியர் ஹபீப்பை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.