முக்கியச் செய்திகள் தமிழகம்

34 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் அன்பில் மகேஸ்

பள்ளி கல்வித் துறையில் 34 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

சட்டமன்றத்தில் பள்ளி கல்வி மற்றும் உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று நடைபெற்றது. இறுதியாக உரையாற்றிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எந்தவித குறிப்புகளும் இன்றி தரவுகளோடு உரையாற்றினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பெரியாரை வணங்கி பதிலுரையைத் தொடங்கிய அமைச்சர், மீன் பிடித்துத் தருவதை விட, மீன் பிடிக்க கற்றுத்தருவதே திராவிட மாடல், அனைவருக்கும் தேநீர் கொடுங்கள் என்றார் மார்க்ஸ். சமமான அளவு தேநீர் கொடுங்கள் என்றார் பெரியார், ஒரே வகையான குவளையில் தேநீர் கொடுங்கள் என்றார் அம்பேத்கர், பசியுடன் இருப்பவர்களுக்கு முதலில் கொடுங்கள் என்றார் கலைஞர், தேநீரை இலவசமாக கொடுங்கள் என்கிறார் ஸ்டாலின் என்று குறிப்பிட்டார். அதனைத் தொடர்ந்து பள்ளி கல்வித் துறைக்கான 34 புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.

1.2022 -23 ஆம் கல்வியாண்டுக்கான திறன் வகுப்பறைகள் ரூபாய் 150 கோடி மதிப்பீட்டில் 7500 உருவாக்கப்படும்.

2. உயர்தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள் 2713 நடுநிலைப் பள்ளிகளில் ரூபாய் 210 கோடி மதிப்பீட்டில் அழைக்கப்படும்.

3. பள்ளிப் பராமரிப்புக்கென 2022-2023 ஆம் கல்வியாண்டு முதல் ரூபாய் 100 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

4. ஆங்கில மொழி ஆய்வகங்கள் 6029 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ரூபாய் 30 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

5. ஆயிரம் மாணவர்களுக்கு மேல் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் விரிவான பள்ளி கட்டமைப்பு திட்டம் ரூபாய் 90 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றப்படும்

6. உலகத் தரத்திலான பள்ளி சென்னையில் ரூபாய் 7 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும். ( செம்மைப் பள்ளி )

7. பாரம்பரிய பள்ளி கட்டடங்கள் ரூபாய் 25 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்படும். ( தமிழ் அறிஞர்கள் தலைவர்கள் விளையாட்டு வீரர்கள் சாதனையாளர்கள் அறிவியல் அறிஞர்கள் படித்த பள்ளிகளும் நூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பயன்பாட்டில் உள்ள பாரம்பரிய பள்ளிக் கட்டடங்களும் அவற்றில் தனிச்சிறப்பு மாறாமல் புதுப்பிக்கப்படும் )

8. சுமார் 12,000 பேருக்கு பள்ளிக் கல்வி அலுவலர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தல்.

9. சிறந்த பள்ளி தலைமை ஆசிரியருக்கான அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது ஆண்டுதோறும் 100 தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழும் கேடயமும் பள்ளிக்கு தலா 10 லட்சம் ஊக்க நிதியும் வழங்கப்படும்.

10. ஆயிரம் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு தொல்லியல் பயிற்சி ரூபாய் 3 கோடி மதிப்பீட்டில் அளிக்கப்படும்.

11. நடமாடும் அறிவியல் ஆய்வகங்கள் 25 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூபாய் 25 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

12. பள்ளி அளவில் கல்வி விளையாட்டு நூல் வாசிப்பு நுண்கலைகள் போன்றவற்றில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு கல்வி சுற்றுலா உலக அளவிலும் தேசிய மாநில அளவில் புகழ்பெற்ற இடங்களுக்கு ரூபாய் 3 கோடி மதிப்பீட்டில் அழைத்துச் செல்லப்படும்.

13. கோடை கொண்டாட்டம் சிறப்பு பயிற்சி முகாம் ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் அளிக்கப்படும்.

14. சாரண சாரணியர் முகாம்களுக்கு மண்டல அளவிலும் மாநில அளவிலும் நடத்த ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு.


15. மாணவர் மன்றங்களை புதுப்பிக்கப்படும். ( பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே கல்வி இணைச் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் வெவ்வேறு காலகட்டங்களில் இலக்கியம் கவின்கலை சூழலியல் உள்ளிட்ட மாணவர் மன்றங்கள் தொடங்கப்பட்டு நடைமுறையில் இருந்தன என்பதால் தற்போது நடத்த முடியாமல் இருந்து வருகிறது )

16. அரசு பள்ளிகளில் பயிலும் லட்சக்கணக்கான மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளி வட்டார மாவட்ட மற்றும் மாநில அளவில் கலைத் திருவிழா ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் நடத்தப்படும்.

17. கணினி நிரல் எந்திரநியல் இயந்திரங்கள் மற்றும் ஹேக்கத்தான் போட்டிகள் மாநில அளவில் நடத்தப்படும்.

18. பள்ளிகளில் விழிப்புணர்வு வாரம் நடத்தப்படும்.

19. மாணவர்களின் உடல் நலன் காக்க சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படும்.

20.அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு செயல்வழிக் கற்றலை ஊக்குவிக்கும் வகையில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் காய்கறித் தோட்டம் மாணவர்களால் ஏற்படுத்தப்படும் அவற்றில் விளையும் காய்கறிகள் பழங்கள் கீரைகள் அப்பள்ளிகளின் சத்துணவில் பயன் படுத்தப்படும் ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில் இத்திட்டம் செயல் படுத்தப்படும்.

21.ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் சென்னையில் நடைபெறும் சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டிகளைத் தொடர்ந்து அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே சதுரங்கம் குறித்து ஆர்வத்தை ஏற்படுத்தும் விதமாக பள்ளி வட்டாரம் மாவட்டம் மற்றும் மாநில அளவில் சதுரங்கப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெறும் மாணவர்கள் சர்வதேச விளையாட்டு வீரர்களுடன் காலந்துரையாட ஏற்பாடு செய்யப்படும் 1 கோடி மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

22.மாணவர்களின் வாசிப்புத் திறனை ஊக்குவிக்க தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தொடக்க வகுப்பு மாணவர்களுக்கு ஊஞ்சல் இதழும் உயர்வகுப்பு மாணவர்களுக்கு தேன்சிட்டு இதழும் மாதமிருமுறை வெளியிடப்படும் மேலும் ஆசிரியர்களுக்கான படைப்புத் தளத்தை உருவாக்கவும் கற்றல் கற்பித்தல் முறைகளை பரிமாறிக்கொள்ளவும் கனவு ஆசிரியர் என்ற மாத இதழ் வெளியிடப்படும் 7 கோடி மதிப்பீட்டில் இத்திட்டம் செயல் படுத்தப்படும்.

23.அரசு மேல்நிலை வகுப்புகளில் கணினி அறிவியல் பாடத்தை விருப்பப்பாடமாக பயிலும் மாணவர்களிடம் 2022 23 ஆம் கல்வி ஆண்டிலிருந்து ரூபாய் 200 தனி கட்டணம் வசூலிக்கப்படுவது முழுமையாக ரத்து செய்யப்படும் இதனால் ஆண்டுதோறும் மூன்று லட்சம் மாணவர்கள் பயனடைவர் இதற்கான செலவீனம் 6 கோடியே அரசே ஏற்கும்.

24.பல்வகை குறைபாடுகள் காரணமாக பள்ளிக்கு வர இயலாத 10 ஆயிரத்து 146 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி மற்றும் இயன்முறை மருத்துவம் உள்ளிட்ட சிகிச்சைகளை அவர்களின் வீடுகளுக்கு சென்று வழங்கி அவர்களின் கற்றல் சூழலை மேம்படுத்த ரூபாய் 8.11 கோடி மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்படும்.

25.அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்களை ஒவ்வொரு மாதமும் பள்ளிக்கு அழைத்து மாணவர்களின் உடல் நலம் கற்றல் அடைவு இணைச் செயல்பாடுகள் விளையாட்டு வாசிப்புத்திறன் மற்ற செயல்பாடுகளில் பங்கேற்பு உள்ளிட்ட பள்ளியின் அனைத்து நிகழ்வுகள் குறித்தும் எடுத்துக் கூறப்படும் இதன் வாயிலாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களும் அவர்தம் பெற்றோரும் பயன்பெறுவர்.

26.ஆசிரியர் தேர்வு வாரியம் போட்டித் தேர்வுகளை திட்டமிட்ட கால அட்டவணைப்படி விரைந்து நடத்திடவும் போட்டித்தேர்வு நடைபெறாத காலங்களில் அரசு பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் வகையிலும் அரசு பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் ரூபாய் 30 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

27.தமிழகத்தில் உள்ள கிராமங்கள் மற்றும் நகரப் பகுதிகளில் நூலக சேவை கிடைக்கப்பெறாத இடங்களில் நூலக நண்பர்கள் என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு தன்னார்வலர்கள் வாயிலாக நூலக சேவை வழங்கப்படும் இத்திட்டம் 15 லட்சம் வாசகர்கள் பயன்பெறும் வகையில் 56.25 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

28.நூலகங்களை பயன்படுத்தும் குழந்தைகள் மற்றும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் நவீன தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய மெய்நிகர் தொழில்நுட்ப நூலகம் 76 நூலகங்களில் ஏற்படுத்தப்படும் இத்திட்டம் ஆண்டுக்கு ஒரு லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூபாய் 57.20 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

29.தமிழ்நாட்டில் 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுதப் படிக்கத் தெரியாத 4.80 லட்சம் நபர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு கல்வி வழங்கும் வகையில் ரூபாய் 9.83 கோடி மதிப்பீட்டில் புதிய எழுத்தறிவுத் திட்டம் செயல்படுத்தப்படும்.

30.நூற்றாண்டு காணும் படைப்பாளிகளின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாளை போற்றும் வகையில் அவர் தம் எழுத்துத் திறன் மற்றும் சமூக பங்களிப்பு போன்றவற்றை இளைய தலைமுறையினர் உணர்ந்து கொள்ளும் வகையில் அவரது தலைசிறந்த படைப்புகள் தெரிவு செய்யப்பட்டு ரூபாய் 20 லட்சம் மதிப்பீட்டில் வெளியிடப்படும்.

31.வரலாறு மற்றும் பண்பாடு ஆர்வலர்கள் மாணவர்கள் ஆய்வாளர்கள் மற்றும் அறிவியலாளர்கள் பயன்பெறும் வகையில் அறிஞர் பெரியசாமி தூரன் அவர்கள் தொகுத்த கலைக்களஞ்சியங்கள் 10 தொகுதிகள், சிறார் களஞ்சியங்கள் 10 தொகுதிகளும் ஆவணப் பதிவாக ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் வெளியிடப்படும்.

32.பள்ளி கல்லூரி, மாணவர்கள் கல்வியாளர்கள் இதழாளர்கள் மற்றும் பொது வாசகர்களிடையே தமிழ், கலை மற்றும் பண்பாட்டு ஆர்வத்தை வளர்க்கும் வகையில் தமிழ்நாடு அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்ட பல்வேறு அறிஞர்களின் படைப்புகளில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 20 நூல்கள் ரூபாய் 30 லட்சம் மதிப்பீட்டில் வெளியிடப்படும்.

33.அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் ஒருங்கிணைப்பில் சர்வதேச அளவில் பல்துறை நிபுணர்கள் அறிவியல் ஆய்வாளர்கள் மற்றும் புகழ்பெற்ற அறிஞர்களின் உரைகள் மிகச் சிறந்த தொழில்நுட்பம் மற்றும் அரங்க அமைப்புடன் TN talk என்ற பெயரில் நிகழ்த்தப்படும். இணையம் வாயிலாக உலகெங்கும் உள்ள தமிழர்களை சென்றடையும் வகையில் இத்திட்டம் ரூபாய் 37.50 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

34.தமிழ்நாடு அரசு பொது நூலகங்களில் நாடிவரும் வாசகர்கள் மற்றும் போட்டித் தேர்வு மாணவர்கள் பயன்பெறும் வகையில் 382 நூலகங்களில் இலவச வைஃபை இணைய வசதி ஏற்படுத்தப்படும். இத்திட்டம் 75 ஆயிரம் வாசகர்கள் பயன்பெறும் வகையில் ரூபாய் இருபத்தி 23.40 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கிராம பெண்களுடன் மகளிர் தினம் கொண்டாடிய மாவட்ட ஆட்சியர்!

Web Editor

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கனமழை; சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு செல்ல 2 நாட்கள் தடை

Yuthi

மணிகண்டனின் உடலை மறு உடற்கூறாய்வு செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

Arivazhagan Chinnasamy