பள்ளிகளில் மாணவிகளுக்கு குழந்தை திருமணம் குறித்து விழிப்புணர்வு

பள்ளிகளில் மாணவியருக்கு குழந்தைத் திருமணத்தின் பாதிப்பு குறித்தும் மற்றும் பாலியல் விழிப்புணர்வும் ஏற்படுத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் 8 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புவரை பயிலும்…

பள்ளிகளில் மாணவியருக்கு குழந்தைத் திருமணத்தின் பாதிப்பு குறித்தும் மற்றும் பாலியல் விழிப்புணர்வும் ஏற்படுத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் 8 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புவரை பயிலும் மாணவியருக்கு குழந்தைத் திருமணம் மற்றும் பாலியல் விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இதற்காக மாணவிகளுக்கு ஆசிரியைகளை நியமிக்க வேண்டும் என்றும், தலா 10 மாணவிகளுக்கு ஒரு ஆசிரியை என்ற அடிப்படையில் பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Representational Image

மேலும் மாணவிகளுக்கு பொறுப்பாளர்களாக ஆசிரியர்களை நியமிக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ள பள்ளிக் கல்வித்துறை, வகுப்பாசிரியை, பாடம் நடத்தும் ஆசிரியை என்றில்லாமல் பொதுவாக 10 மாணவியருக்கு ஓர் ஆசிரியை என்ற வீதத்தில் நியமிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.