தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மாணவர்களுக்குள் அடித்துக்கொள்ளுதல், ஆசிரியர்கள் மோதல், பாலியல் வன்முறை, சத்துணவில் பல்லி விழுதல், சாலை விபத்து உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடந்தால் உடனடியாக CEO கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
CEO அனுமதி பெற்றே, பத்திரிகைகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் குடிநீர், கழிப்பறை, ஆசிரியர் பற்றாக்குறை, மாணவர் எண்ணிக்கை, ஆசிரியர் காலியிட விவரம் போன்ற எதையும் பத்திரிகைகளுக்கு CEO அனுமதியின்றி தெரிவிக்கக் கூடாது என்றும் எச்சரித்துள்ளது.
பள்ளிக்கு உள்ளூர் விடுமுறை விட்டால், CEO-க்கு முறைப்படி தகவல் தெரிவிக்க வேண்டும். மரத்தடியில் வகுப்புகளை நடத்தக்கூடாது. சத்துணவுசுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுகிறதா? முட்டை நல்ல நிலையில் உள்ளதா? என்பதை ஆசிரியர்கள் தினந்தோறும் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
– இரா. நம்பிராஜன்








