சென்னை மாநகராட்சியில் உள்ள வார்டுகளின் எண்ணிக்கையை 200-ல் இருந்து 230ஆக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான விதிகள் 2023 என்ற பெயரில், புதிய விதிகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி, மாநகராட்சிகளில் 80 லட்சத்துக்கும் மேல் மக்கள் தொகை இருந்தால் 230 கவுன்சிலர்கள் இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், தமிழ்நாடு முழுவதும் மக்கள் தொகை அடிப்படையில் வார்டுகள் எண்ணிக்கையை உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
அனைத்து கட்சிகளிடம் கருத்துக்கேட்பு நடத்தி வார்டுகளின் எண்ணிக்கையை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.







