“இந்தியை திணிக்காதீர்கள் என்று சொல்வது, வேறு மொழியை வெறுப்பது அல்ல” – பவன் கல்யாணுக்கு பிரகாஷ் ராஜ் பதில்!

இந்தியை திணிக்காதீர்கள் என்று சொல்வது, வேறு மொழியை வெறுப்பது அல்ல என்று ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணுக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் பதிலளித்துள்ளார்.

புதிய தேசிய கல்விக் கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு எதிர்த்து வருகிறது. இது நாடு முழுவதும் அரசியலில் பேசுபொருளாகியுள்ளது.

இந்த சூழலில் நேற்று(மார்ச்.14) நடைபெற்ற ஜனசேனா கட்சியின் நிறுவன நாளில் அக்கட்சியின் தலைவரும் ஆந்திர மாநில துணை முதலமைச்சருமான பவன் கல்யாண், நாட்டின் ஒருமைபாட்டிற்கு தமிழ் உட்பட பல மொழிகள் தேவை என்றும் இந்தி வேண்டாம் என்றால், நிதி ஆதாயத்திற்காக ஏன் தமிழ் படங்களை இந்தியில் டப்பிங் செய்கிறார்கள்? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இது குறித்து பலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வரும் நிலையில், பவன் கல்யாணுக்கு நடிகர் பிரகாஷ்  ராஜ் பதிலளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “உங்கள் இந்தி மொழியை எங்கள் மீது திணிக்காதீர்கள்” என்று சொல்வது, வேறு மொழியை வெறுப்பது அல்ல, நமது தாய்மொழியையும், நமது தாயையும் சுயமரியாதையுடன் பாதுகாப்பது” என்று யாராவது பவன் கல்யாணுக்கு சொல்லுங்கள்”

இவ்வாறு நடிகர் பிரகாஷ்  ராஜ் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.