சவுதி அரேபியாவின் தாயிப் நகரில் அமைந்துள்ள கிரீன் மவுண்டன் பூங்காவில் நேற்று பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. பூங்காவில் இருந்த “360 டிகிரி” என அழைக்கப்படும் அதிவேக சுழற்சி ராட்டினம் ஒன்று வழக்கம்போல சுற்றிவந்துக் கொண்டிருந்தபோது, திடீரென இரண்டாக உடைந்து கீழே விழுந்து விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் 26 பேர் காயமடைந்துள்ளனர். உடனடியாக பூங்கா ஊழியர்கள் அவர்களை மீது அருகில் இருந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன. சவுதி அதிகாரிகள் இந்தச் சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணையை அறிவித்துள்ளனர். மேலும் பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.








