ஐநா பாதுகாப்பு அவையில் இந்தியா – சீனா மட்டுமே எதிர்க்கிறது

ஐநா பாதுகாப்பு அவையில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு சீனா மட்டுமே எதிர்ப்பு தெரிவித்து வருவதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. உலகின் மிகப் பெரிய சர்வதேச அமைப்பாக ஐக்கிய நாடுகள் சபை உள்ளது. இதில்…

ஐநா பாதுகாப்பு அவையில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு சீனா மட்டுமே எதிர்ப்பு தெரிவித்து வருவதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

உலகின் மிகப் பெரிய சர்வதேச அமைப்பாக ஐக்கிய நாடுகள் சபை உள்ளது. இதில் சக்தி வாய்ந்த அமைப்பாக ஐநா பாதுகாப்பு அவை உள்ளது. இதில், சீனா, பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய 5 நாடுகள் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ளன.

ஐநா பாதுகாப்பு அவையில் நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளாக 10 நாடுகள் தேர்வு செய்யப்படும். இந்த நாடுகளுக்கான கால அளவு 2 ஆண்டுகள்.

நிரந்தர உறுப்பு நாடுகளுக்கு மட்டுமே வீட்டோ அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஐநா பாதுகாப்பு அவையில் நிரந்தர உறுப்பு நாடாக ஆவதற்கு இந்தியா நீண்ட காலமாக முயற்சி மேற்கொண்டு வருகிறது. எனினும், இந்தியாவின் முயற்சி இதுவரை வெற்றி பெறவில்லை.

இந்நிலையில், இது குறித்து நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி. முரளிதரன் பதில் அளித்துள்ளார்.

அதில், ஐநா பாதுகாப்பு அவையில் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ள 5 நாடுகளில் 4 நாடுகள் இந்தியா நிரந்தர உறுப்பு நடாக எழுத்துப்பூர்வ ஆதரவை அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஒரு நாடு மட்டுமே(சீனா) ஆதரவு அளிக்கவில்லை என தெரிவித்துள்ள அவர், இதற்கு முடிவு கட்டும் நோக்கில், சர்வதேச ஆதரவை திரட்டும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருவதாகவும் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.