சசிகலா விடுதலையால் அதிமுகவின் வெற்றி பாதிக்கப்படாது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர், டெல்லியில் நேற்று நடைபெற்ற வன்முறை சம்பவம் துருதிஷ்டவசமானது என்றார். அப்பாவி விவசாயிகளுடன் சமூக விரோத கும்பல் புகுந்து, குடியரசு தினம் மற்றும் நாட்டிற்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், ஸ்டாலினின் மக்கள் பிரச்னையை தீர்க்கும் திட்டத்தால், மக்கள் குழம்பி போய் உள்ளதாகவும், தேர்தலுக்காக, திமுக, நாடக அரசியல் செய்யக் கூடாது எனவும் வாசன் வலியுறுத்தினார். ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்பட்டதற்கு தமாகா சார்பில் வாழ்த்து தெரிவித்த ஜி.கே.வாசன், சசிகலா விடுதலையால், அதிமுகவின் வெற்றி பாதிக்கப்படாது என தெரிவித்தார்.







