முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

”இனிமேல் பார்க்கத்தானே போறீங்க”- எடப்பாடி பேச்சுக்கு சசிகலா பதிலடி

ஓபிஎஸ் உள்ளிட்டோர் மன்னிப்பு கேட்டாலும் அதிமுகவில் சேர்த்துக்கொள்ளப்படமாட்டார்கள் என அக்கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளது குறித்து பதிலளித்த சசிகலா, ”இனிமேல் பார்க்கத்தானே போறீங்க” எனக் கூறினார். 

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சீரடி
சாய்பாபா ஆலய மகா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் சசிகலா பேசினார். அப்போது அதிமுக பொதுச்செயலாளர் யார் என்பது பொதுமக்களும், கட்சித் தொண்டர்களும் முடிவு
செய்ய வேண்டிய விஷயம் என தெரிவித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதிமுக ஒன்றுபட வேண்டும் என்பதற்காக சசிகலாவை சந்திப்பேன் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்,  கூறியுள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்த சசிகலா,  ஓ.பன்னீர்செல்வம் மட்டுமல்ல யார் வந்தாலும் அவர்களை சந்தித்து பேசுவேன் என்றார்.


தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களிடம்
பேசி வருகிறார்களா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த சசிகலா, பொருத்திருந்து பாருங்கள் என்றார்.

மன்னிப்புக்கேட்டால்கூட ஓ.பி.எஸ் உள்ளிட்டோர் அதிமுகவில் சேர்த்துக்கொள்ளப்படமாட்டார்கள் என அக்கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ”இனிமேல் பார்க்கத்தானே போறீங்க” என சசிகலா கூறினார்.  அடுத்து முக்கிய நடவடிக்கை ஒன்றை சசிகலா மேற்கொள்வார் என யூகிக்க வைக்கும் வகையில் அவரது பதில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பள்ளி மாணவர்களை வெளிநாட்டுக்கு அழைத்து செல்லும் திட்டம் -அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி

EZHILARASAN D

குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளர்; டி.ராஜா முன்வைக்கும் கோரிக்கை

EZHILARASAN D

சித்திக் கப்பன் ஜாமீனுக்கு சிரமப்பட்ட வழக்கறிஞர்கள் – உதவிய பத்திரிகையாளர்

Web Editor