திமுக-வின் பி டீம் தான் சசிகலா – ஜெயக்குமார் விமர்சனம்

அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்தியது தொடர்பான வழக்கில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நேரடி வாக்குமூலம் அளித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சசிகலா திமுக-வின் பி டீம் தான் என விமர்சித்துள்ளார். …

அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்தியது தொடர்பான வழக்கில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நேரடி வாக்குமூலம் அளித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சசிகலா திமுக-வின் பி டீம் தான் என விமர்சித்துள்ளார். 

 

அதிமுகவின் கொடியை பயன்படுத்தியது, பொதுச் செயலாளர் என்ற பெயரை பயன்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் குறித்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் அவர் இன்று நேரடி வாக்கு மூலம் அளித்தார்.

 

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவர் நீதிபதியிடம் வாக்கு மூலம் அளித்துள்ளார். பின்னர் வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், சசிகலா மீது கொடுக்கப்பட்ட புகார்கள் குறித்து எவ்வித நடவடிக்கையும் காவல்துறை எடுக்காததை பார்க்கும்பொழுது, திமுகவின் B Team தான் சசிகலா என்று எண்ணத் தோன்றுவதாக குறிப்பிட்டார்.

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பாணையை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள நிலையில், பாரதிய ஜனதா அறிமுகப்படுத்தும் வேட்பாளருக்கு அதிமுகவின் ஆதரவு இருக்குமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து பேசிய ஜெயக்குமார், இந்த கேள்விக்கு அதிமுகவின் தலைமை முடிவு எடுக்கும் என்றார். மேலும் சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்துவது, பொதுச்செயலாளர் பெயடி பயன்படுத்துவது தொடர்பாக தான் நீதிபதியிடம் ஒரு மணி நேரத்திற்கு மேலாக விளக்கமளித்துள்ளதாகவும் அவரே தெரிவித்தார்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.