முக்கியச் செய்திகள் சினிமா

திருமண அரங்கினுள் அனுமதிக்கப்படாத பவுன்சர்கள்

நயன்தாரா – விக்னேஷ் சிவன் புதுமனத்தம்பதியுடன் குழு புகைப்படம் கூட எடுக்க முடியாதது மிகுந்த வேதனையான ஒன்று என பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பவுன்சர்கள் தெரிவிக்கின்றனர். 

நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் கடந்த ஆறு வருடங்களாகக் காதலித்து வந்தனர். சில மாதங்களுக்கு முன் நிச்சயதார்த்தம் எளிமையாக நடந்தது. இவர்கள் திருமணம், ஜூன் 9-ஆம் தேதி நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. திருமணம், திருப்பதியில் நடக்க இருந்தது. பயண தூரம் உள்ளிட்ட சில காரணங்களால் அங்கு நடத்துவது சிரமம் என்று மாமல்லபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் நடத்த முடிவு செய்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதன்படி, இவர்கள் திருமணம் இன்று காலை நடந்தது. 20 சிவாச்சாரியார்கள் மந்திரம் முழங்க, காலை 10.25 மணிக்கு நயன்தாரா கழுத்தில் விக்னேஷ் சிவன் தாலி கட்டினார். திருமணத்தில், நெருங்கிய உறவினர்கள், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் மணிரத்னம், பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான், தயாரிப்பாளர் போனி கபூர், இசை அமைப்பாளர் அனிருத், நடிகர்கள் சூர்யா, கார்த்தி , அஜித் மனைவி ஷாலினி உட்பட ஏராளமான திரையுலகினர் மணமக்களை வாழ்த்தினர்.

அண்மைச் செய்தி: “100% நகைக்கடன் தள்ளுபடி” – கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி

இந்நிலையில், அழைப்பு விடுக்கப்பட்ட நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு, மிகுந்த கட்டுப்பாடுகளுடன் நடைபெற்ற நயன்தாராவின் திருமணத்திற்குப் பாதுகாப்பு வழங்குவதற்காகத் தனியார் பாதுகாவலர்களான பவுன்சர்கள் 80 பேர் வரை மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர். என்றாலும் விடுதியினுள் நுழைந்தவுடனேயே பவுன்சர்களின் அலைபேசிகள் வாங்கி வைக்கப்பட்டதுடன், நயன்தாராவின் திருமணம் நடைபெற்ற அரங்கிற்குள் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. திருமண அரங்கினுள் முன்னணி நடிகர், நடிகையர், திருமண இசைக்கலைஞர்கள், தனியார் ஓடிடி நிறுவன ஒளிப்பதிவாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

திருமணம் முடிந்த பிறகு நயன்தாரா – விக்னேஷ் சிவன் இணையருடன் குழு புகைப்படம் எடுக்க வாய்ப்புக் கிடைக்கும் எனக் காத்திருந்த பவுன்சர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. நயன்தாராவின் திருமணம் நிறைவடைந்தவுடன் திரைப்பிரபலங்கள் அடுத்தடுத்து புறப்பட்டுச்சென்றனர். இதுகுறித்து பவுன்சர்கள் தெரிவிக்கும்போது, திருமணம் முடிந்த பிறகு நயன்தாரா – விக்னேஷ் சிவன் புதுமனத்தம்பதியுடன் குழு புகைப்படம் கூட எடுக்க முடியாதது மிகுந்த வேதனையான ஒன்று, இத்தனைக்கும் நாள் ஒன்றுக்கு 1500 ரூபாய் மட்டுமே சம்பளமாக வழங்கப்பட்டதாகக் கூறுகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இந்தியாவில் 24 மணி நேரத்தில் 7,145 பேருக்கு கொரோனா

EZHILARASAN D

பனிக்கட்டியாக உறைந்த நயாகரா நீர்வீழ்ச்சி!!!

Jayasheeba

முதலமைச்சர் கான்வாய்; காவலர்கள் எண்ணிக்கை குறைப்பு

EZHILARASAN D