அதிமுக கொடி ஏற்றிய சசிகலா: ’கழக பொதுச்செயலாளர்’ என கல்வெட்டு

அதிமுக பொன்விழாவை ஒட்டி, சென்னை எம்ஜிஆர் நினைவு இல்லத்திற்கு வந்த சசிகலா, அதிமுக கொடியை ஏற்றி வைத்தார். அதிமுகவின் பொன் விழா ஆண்டு தொடக்க விழாவையொட்டி, அதிமுக சார்பில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு…

அதிமுக பொன்விழாவை ஒட்டி, சென்னை எம்ஜிஆர் நினைவு இல்லத்திற்கு வந்த சசிகலா, அதிமுக கொடியை ஏற்றி வைத்தார்.

அதிமுகவின் பொன் விழா ஆண்டு தொடக்க விழாவையொட்டி, அதிமுக சார்பில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

சென்னை தி.நகர் எம்ஜிஆர் நினைவு இல்லத்திற்கு அதிமுக கொடியுடன் கூடிய காரில் சசிகலா இன்று காலை வந்தார். அவரை அவருடைய ஆதரவாளர்கள் வரவேற்றனர். சசிகலா, எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதனை தொடர்ந்து எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தில் அதிமுக கொடியை ஏற்றினார். பிறகு அதிமுக பொன்விழா கல்வெட்டையும் திறந்து வைத்தார். அதில் ’கழக பொதுச்செயலாளர் சசிகலா’ எனவும் பெயர் பொறிக்கப்பட்டு இருந்தது.

தொடர்ந்து அவர், அங்கு இடம்பெற்றுள்ள புகைப்படங்களை பார்வையிட்டார். மேலும் எம்.ஜி.ஆரின் பேரன் குமார் ராஜேந்திரன் எழுதிய “எனக்கு மட்டும் தெரிந்த எம்.ஜி.ஆர் ” என்ற புத்தகத்தையும் சசிகலா வெளியிட்டார்.

கல்வெட்டில் ’கழக பொதுச்செயலாளர் சசிகலா’ என பொறிக்கப்பட்டு இருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.