முக்கியச் செய்திகள் தமிழகம்

சர்தார் திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு!

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார்’ திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது.

பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார் படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் நடிகர் கார்த்தி கதநாயகனாக நடிக்கிறார். மேலும் நடிகை ராஷிகானா கதாநாயகியாக நடித்து வருகிறார். கர்ணன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த கேரள நடிகை ரஜிஷா விஜயனும் இதில் நடிக்கிறார். இந்த படத்திற்கான பாடலுக்கு இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதனையடுத்து இந்த திரைப்படத்தின் ஃபஸ்ட் லுக்கை படக்குழுவினர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.

மேலும் நடிகர் கார்த்தி அவரது ட்விட்டர் பக்கத்தில் இயக்குனர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் இப்படத்தில் நடிப்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருப்பதாகவும் பதிவிட்டிருந்தார். இதனைத்தொடர்ந்து சர்தார் படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டரையும் பதிவிட்டிருந்தார்.

மேலும் பிரபல நடிகை ராஷிகாவும் அவரது ட்விட்டர் பதிவில் இயக்குனர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி உடன் முதல் முறை நடிப்பது தனக்கு மிகவும் மகிழச்சியாக இருப்பதாகவும், அதேபோல மிகவும் ஆர்வமாக இருக்கிறது என்றும் தெரிவித்தார். மேலும் படத்தினுடைய ஃபஸ்ட் லுக் போஸ்டரையும் அதனுடன் பதிவிட்டிருந்தார்.

Advertisement:
SHARE

Related posts

கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட ஹரியானா அமைச்சருக்கு கொரோனா உறுதி!

Arun

சேலத்திலிருந்து நாளை முதல் மீண்டும் தேர்தல் பரப்புரையை தொடங்கும் முதல்வர்!

Gayathri Venkatesan

கொரோனாவால் நாடு முழுவதும் ஒரே நாளில் 607 பேர் உயிரிழப்பு

Halley karthi