கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் சர்தார் 2. இது கடந்த 2022 ஆம் தேதி வெளியான சர்தார் திரைப்படத்தின் இரண்டாம் பாகமாகும். பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா வில்லனாக நடிக்கிறார்.
மேலும் இப்படத்தில் மாளவிகா மோகனன், ரஜியா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு சாம் சி. எஎஸ். இசையமைக்கிறார். இப்படம் செப்டம்பர் 10 ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்த நிலையில் சர்தார் 2 திரைப்படத்தின் டீசர் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.




