முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள் சினிமா

பத்து நாட்களில் ரூ725 கோடி வசூலை அள்ளிய பதான் திரைப்படம்

ஷாருக்கானின் பதான் திரைப்படம் வெளியான 10 நாட்களில் உலக அளவில் 725 கோடி ரூபாய் வசூல் செய்து  சாதனை படைத்துள்ளது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஷாருக் கான் நடிப்பில் வெளியான பதான் திரைப்படம் ஜனவரி 25ம் தேதி வெளியானது. யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் ஜான் ஆப்ரஹாமும் சிறப்பு தோற்றத்தில் சல்மான் கானும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பதான் படத்தின் பாடல் மற்றும் ட்ரைலர் வெளியானதிலிருந்தே பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வந்தது. தீபிகா படுகோன் காவி நிறத்தில் பிகினி உடை அணிந்து பேஷாரம் ரங் பாடலில் தோன்றியது கடும் சர்ச்சைக்கு உள்ளாகின.  பதான் படத்திற்கு வலது சாரி அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தின.

பல்வேறு  எதிர்ப்புகளுக்கு இடையே ஜனவரி 25ம் தேதி  உலகம் முழுவதும் சுமார் 100 நாடுகளில் கிட்டத்தட்ட 2500 திரையரங்குகளில் பதான் திரைப்படம் வெளியானது.  சமீபகாலமாக இந்தி திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்து வருவதால் பதான் படத்தின் ரிசல்ட் பாலிவுட்டில் அதிக எதிர்பார்ப்புக்கு உள்ளாகியது.

நீண்ட நாளைக்குப் பிறகு ஷாருக்கான் திரைப்படம் திரைக்கு வந்துள்ளதால் அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்தனர். இந்தி, தமிழ், தெலுங்கு என பல்வேறு மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியான பதான் வசூலை குவித்து வருகிறது. படம் வெளியான இரண்டு நாட்களில் 219.60 கோடி ரூபாய் வசூலை ஈட்டியது. நான்கு நாட்களின் முடிவில் இந்தியாவில் மட்டும் ரூ.265 கோடி  மற்றும் உலகின் பிற பகுதிகளில் ரூ.164 கோடி என  மொத்தமாக  கிட்டத்தட்ட ரூ.429 கோடி வசூலித்தது.

இந்த நிலையில் 10வது நாளாக பதான் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நேற்றைய நாளின் முடிவில் உலக அளவில் 725 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது. தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதால் அமீர் கானின் தங்கல் படத்தின் இந்திய வசூலை பதான் திரைப்படம் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஷாருக் கானின் படம் 10 நாட்களை கடந்தும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதால் இந்த வாரம் வெளியான பல படங்களுக்கு சிக்கல் ஏற்ப்பட்டு வசூலும் குறைந்து வருகிறது. பிரபல இயக்குனர் அனுராக் கஷ்யப்பின் திரைப்படமான ”பியார் நித் டிஜே முஹப்பத்” படம் எதிர்பார்த்த அளவுக்கு ஒட்டம் இல்லாமல் சிரமத்தை சந்தித்து வருவதாக விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

”அதிமுக சமுத்திரம்; ஓபிஎஸ் அதில் ஒரு சொட்டு தான்” – ஜெயக்குமார் விமர்சனம்

EZHILARASAN D

பிரபல பாலிவுட் நடிகையின் கணவர் ஆபாச பட வழக்கில் கைது

Vandhana

“ஸ்ரீரங்கம் பெருமாளை பெரியார் வழிபடுவதாகவே கருதுகிறேன்”- டிடிவி தினகரன்

Web Editor