”சங்கரய்யா நம் எல்லோருக்கும் வழிகாட்டி “ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!!

பொதுவாழ்விலும் பொதுவுடைமை இலட்சியங்களைக் கடைப்பிடிப்பதிலும் நம் எல்லோருக்கும் வழிகாட்டியாக விளங்கும் அவர் நலமுடன் வாழ வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு அரசியலின் முதுபெரும் அரசியல் ஆளுமையும் பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவரும், …

பொதுவாழ்விலும் பொதுவுடைமை இலட்சியங்களைக் கடைப்பிடிப்பதிலும் நம் எல்லோருக்கும் வழிகாட்டியாக விளங்கும் அவர் நலமுடன் வாழ வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டு அரசியலின் முதுபெரும் அரசியல் ஆளுமையும் பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவரும்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்சியைச் சேர்ந்தவருமான  என்.சங்கரய்யா இன்று தனது 102 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சுதந்திர போராட்டத்தில் கல்லூரி இளைஞனாக தனது அரசியல் பயணத்தை தொடங்கிய சங்கரய்யா தமிழ்நாட்டின் அரசியலில் அனைத்து அரசியல் தலைவர்களும் கொண்டாடும் தலைவராக திகழ்கிறார்.

சங்கரய்யாவின் பிறந்தநாளுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் சங்கரய்யாவிற்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

அவர் தெரிவித்துள்ளதாவது..

“ பொதுவுடைமை இயக்கத்தின் முதுபெரும் தலைவர் ‘தகைசால் தமிழர்’  சங்கரய்யாவின் 102-ஆவது பிறந்தநாள்! பொதுவாழ்விலும் பொதுவுடைமை இலட்சியங்களைக் கடைப்பிடிப்பதிலும் நம் எல்லோருக்கும் வழிகாட்டியாக விளங்கும் அவர் நலமுடன் வாழிய பல்லாண்டு!” என அவர் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.