உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக இன்று பதவியேற்கிறார் சஞ்சீவ் கன்னா!

உச்ச நீதிமன்றத்தின் 51வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா இன்று பதவியேற்கிறார். உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த டி.ஒய்.சந்திரசூட் நேற்று ஓய்வு பெற்றார். இதற்கிடையில், மிக மூத்த நீதிபதியான சஞ்சீவ் கன்னாவை அடுத்த…

உச்ச நீதிமன்றத்தின் 51வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா இன்று பதவியேற்கிறார்.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த டி.ஒய்.சந்திரசூட் நேற்று ஓய்வு பெற்றார். இதற்கிடையில், மிக மூத்த நீதிபதியான சஞ்சீவ் கன்னாவை அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்க அவர் ஏற்கனவே பரிந்துரை செய்திருந்தார். அதை ஏற்று, புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னாவை கடந்த மாதம் 24-ந் தேதி மத்திய அரசு நியமித்தது.

இதையும் படியுங்கள் : மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி | ஜப்பான்- தென் கொரியா அணிகள் இன்று மோதல்!

இந்நிலையில், நாட்டின் 51-வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா இன்று பதவியேற்கிறார். குடியரசு தலைவர் மாளிகையில் நடக்கும் நிகழ்ச்சியில் அவருக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். அடுத்த ஆண்டு (2025) மே 13-ந் தேதி வரை சஞ்சீவ் கன்னா பதவியில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.