ஜெயலிலதா இல்லாத நிலையில் நடைபெற உள்ள இந்த தேர்தலில், மக்கள்தான் அதிமுகவை ஆதரிக்க வேண்டும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கேட்டுக்கொண்டார்.
மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பை தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு பொதுமக்களுக்கு வழங்கினார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சியில் பொங்கல் பரிசு வழங்கியபோது கட்சியின் சின்னம் பொறித்து கொடுத்ததாக விமர்சனம் செய்துள்ளார். ஜெயலலிதா இல்லாத நிலையில் நடைபெறவுள்ள இந்த தேர்தலில் தாயில்லாத பிள்ளைகளாக அதிமுக உள்ளது என்றும், அதனால் மக்கள்தான் அதிமுகவை ஆதரிக்க வேண்டும் என்றும் கூறினார்.
மேலும் பேசிய அவர், ‘நல்லவர் ஆட்சி செய்தால் மூன்று பருவங்களில் மழை பொழியும். ஆண்டவனே ஆட்சி செய்தாலும் ஸ்டாலின் குறையை மட்டுமே கூறுவார். முதல்வர் பழனிசாமியின் ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். தேர்தல் நேரத்தில் திமுகவினர் கொஞ்சலாக பேசுவார்கள், குறிப்பாக எதிர்கட்சியில் இருக்கும் போது பெட்டிக்குள் இருக்கும் பாம்பு போல இருப்பார்கள், ஆட்சிக்கு வந்தால் படமெடுத்து ஆடுவார்கள்’ என விமர்சனம் செய்துள்ளார்.







