நிரந்தர பணியாளர்களின் கணக்கில் வருங்கால வைப்பு நிதி தொகையை செலுத்தாது சம்பந்தமாக மாநகராட்சி ஊழியர்கள், கைகளில் பானையுடன் பிச்சைக்கேட்டு சேலம் மாநகராட்சி ஊழியர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

நிரந்தர பணியாளர்களின் கணக்கில் வருங்கால வைப்பு நிதி தொகையை ஆறு வருடமாக கோடிக்கணக்கான ரூபாய் செலுத்தாதது, தொகுப்பூதிய நிரந்தர பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதி கடந்த 22 ஆண்டுகளாக செலுத்தாதது, பணியாளர்களுக்கு சீருடை தையல் கூலி, பாதுகாப்பு உபகரணங்கள் போன்றவை பல ஆண்டுகளாக வழங்கவில்லை என்றும், மாநகராட்சி துப்புரவு மற்றும் மலேரியா பணியாளர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக சம்பளம் வழங்காததை கண்டித்தும் கையில் பானையுடன் பிச்சை கேட்டு நூதன முறையில் 100க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்