நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் ஏப்ரல் 10 அன்று விசாரணைக்கு வரும் என்று கூறப்படுகிறது. அந்த விவாகரத்து மனுவில், விஜய் ஒரு நடிகையுடன் திருமணம் மீறிய உறவில் இருப்பதாக சங்கீதா பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். விஜய் மீது அவரது மனைவி சங்கீதா கூறிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகின.
இந்த நிலையில், தன்னை நீலாங்கரை வீட்டிற்குள் அனுமதிக்குமாறு விஜய்க்கு உத்தரவிடக்கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விஜயின் மனைவி சங்கீதா புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அம்மனுவில் சங்கீதா கூறியிருப்பதாவது, விவாகரத்து பெறும் வரை விஜய்யின் நீலாங்கரை வீட்டில் தங்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். தான் லண்டனைச் சேர்ந்தவர் என்பதால் வேறு எங்கும் தங்க அனுமதியில்லை என்றும் தன் வீட்டில் தங்க அனுமதிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
படத்தில் நடித்து கோடி கோடியாய் சம்பாதிக்கும் விஜய் தனக்கும், பிள்ளைகளுக்கும் நியாயமான ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்றும், விஜய் எனக்கும், என் பிள்ளைகளுக்கும் நியாயமாக சேர வேண்டியதை வழங்க வேண்டும். மேலும் பலமுறை முயற்சித்தும் பரஸ்பரம் பிரிந்து செல்ல விஜய் மறுப்பு தெரிவிப்பதாக மனுவில் கூறியுள்ளார்.







