கேரளாவில் வாவர் பள்ளிவாசலில் நடைபெற்ற புகழ்பெற்ற சந்தனக்கூடு திருவிழாவில் முஸ்லீம்களுக்கு அப்பகுதி இந்து மக்கள் பொன்னாடை போர்த்தி மரியாதைகள் செய்து எரிமேலியில் உள்ள ஸ்ரீ சாஸ்தா ஐயப்பன் கோவிலுக்கு அழைத்துச் செல்வார்கள்.
புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கிற்காக
திறக்கப்பட்டு லட்சக்கணக்கான ஐயப்ப பக்தார்கள் ஐயப்பனை தரிசனம் செய்த நிலையில் வரும் 14ஆம் தேதி மகரஜோதி விழா நடைபெறுவதை ஒட்டி எரிமேலி வாவர் பள்ளிவாசலில் சந்தனக்கூடு திருவிழா நேற்று இரவு நடைபெற்றது.

இந்து முஸ்லீம் ஒற்றுமையை எடுத்துக்காட்டும் வகையில் இந்த சந்தனக்கூடு திருவிழா நடைபெற்றது. இதில் வாவர் பள்ளிவாசலை சேர்ந்த ஜமாத் தலைவர்கள் வாவர் பள்ளிவாசலில் தொடங்கி யாணை பவனி உடன் மேளதாளங்களுடன், டிஜேவுடன் நூற்றுக்கணக்கான முஸ்லிம் இளைஞர்கள் ஆட்டம் பாட்டத்துடன் பங்கெடுத்து ஊர்வலமாக வரும் இவர்களை எரிமேலியில் உள்ள வாவர் பள்ளிவாசல் சந்திப்பில் முஸ்லீம் பெருமக்களுக்கு, இந்து சமூகத்தை சார்ந்தவர்கள் பொன்னாடை போர்த்தி மரியாதைகள் செய்து எரிமேலியில் உள்ள ஸ்ரீ சாஸ்தா ஐயப்பன் கோவிலுக்கு அழைத்துச் செல்வார்கள்.

இந்த நிகழ்வில் எரிமேலி மற்றும் எரிமேலியை சுற்றி உள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான இரு மதத்தை சேர்ந்து பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் இந்த சந்தனக்கூடு திருவிழாவில் கலந்து கொள்வார்கள். இந்த விழாவானது இந்துக்கள் மற்றும் முஸ்லீம் மக்களின் மத நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் பரைசாற்றும் திருவிழாவாக உள்ளது.







