முக்கியச் செய்திகள் இந்தியா விளையாட்டு

முதல் வெற்றியை பதிவு செய்தது சென்னையின் எஃப்சி

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் சென்னையின் எஃப்சி அணி கொல்கத்தா அனியை வீழ்த்தி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

9-வது இந்தியன் சூப்பர் லீக் (ISL) கால்பந்து போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. மொத்தம் 11 அணிகள் இதில் பங்கேற்றுள்ளன. முன்னாள் சாம்பியனான சென்னையின் எப்.சி. தனது முதலாவது லீக் ஆட்டத்தில், 3 முறை சாம்பியன் பட்டம் வென்ற ஏ.டி.கே. மோகன் பகானுடன் கொல்கத்தாவில் நேற்று மோதியது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த ஆட்டத்தின் 27-வது நிமிடத்தில் மோகன் பகான் வீரர் மன்வீர் சிங் முதல் கோலை அடித்தார். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் மோகன் பகான் அணி 1 கோல் முன்னிலையில் இருந்தது. பின்னர் பரபரப்பாக நடைபெற்ற 2-வது பாதியின் 62-வது நிமிடத்தில் சென்னை வீரர் கவாமே கரிகாரி கோல் அடிக்க போட்டி சமநிலை பெற்றது.

தொடர்ந்து இரு அணி வீரர்களும் கோல் அடிக்க தீவிர முயற்சி செய்தனர். ஆட்டத்தின் 82 வது நிமிடத்தில் ரஹீம் அலி கோல் அடிக்க சென்னை அணி முன்னிலை பெற்றது. பின்னர் கொல்கத்தா அணி கோல் எதுவும் அடிக்காத நிலையில், சென்னையின் எப்.சி அணி 2-1 என்ற கோல் கணக்கில் மோகன் பகான் அணியை வீழ்த்தி தனது முதல் போட்டியில் வெற்றி வாகை சூடியது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

டெல்டா மாவட்டங்களை கண்ணின் இமைபோல காப்போம்; அமைச்சர் உறுதி

G SaravanaKumar

அரிசி கடத்தலில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டம் – கூட்டுறவுத்துறை செயலாளர் எச்சரிக்கை

EZHILARASAN D

எம்.ஜி.ஆர் இல்லையென்றால் திமுக ஆட்சிக்கு வந்திருக்காது: ஜெயக்குமார்

EZHILARASAN D