குடியரசு தலைவர் வேட்பாளருக்கு மணற்சிற்பம்!

பாஜகவின் குடியரசு தலைவர் வேட்பாளரான திரௌபதி முர்முவுக்கு ஒடிசா கடற்கரையில் சுதர்சன் பட்நாயக் வாழ்த்து தெரிவித்து மணற்சிற்பம் வரைந்துள்ளார். நாட்டின் 15 வது குடியரசுத் தலைவருக்கான தேர்தல் ஜூலை 18 ஆம் தேதி நடைபெற…

பாஜகவின் குடியரசு தலைவர் வேட்பாளரான திரௌபதி முர்முவுக்கு ஒடிசா கடற்கரையில் சுதர்சன் பட்நாயக் வாழ்த்து தெரிவித்து மணற்சிற்பம் வரைந்துள்ளார்.

நாட்டின் 15 வது குடியரசுத் தலைவருக்கான தேர்தல் ஜூலை 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஜார்கண்ட் மாநில முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு களமிறக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவை களம் காண்கிறார்.

இதைத்தொடர்ந்து, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோருடன் சென்று திரௌபதி முர்மு இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில் பிரபல மணற்சிற்ப கலைஞரன சுதர்சன் பட்நாயக் ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில் பாஜகவின் குடியரசு தலைவர் வேட்பாளரான திரௌபதி முர்முவுக்கு வாழ்த்துத் தெரிவித்து மணற் சிற்பம் ஒன்றை வரைந்துள்ளார். அதில், திரௌபதி முர்முவின் புகைப்படத்தை வரைந்து அதற்கு கீழ் வாழ்த்துக்கள் திரௌபதி முர்மு என்று எழுதியுள்ளார். இந்த மணற்சிற்பத்தை அங்கு வந்த சுற்றுலா பயணிகள் கண்டு கழித்து புகைப்படம் எடுத்து கொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.