உலகின் இளம் வயது டேக்வாண்டோ பயிற்சியாளர் – கின்னஸ் சாதனை படைத்த 7 வயது சிறுமி!

மதுரையைச் சேர்ந்த சம்யுக்தா உலகின் இளம் வயது டேக்வாண்டோ பயிற்சியாளராக கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். மதுரையை சேர்ந்த சம்யுக்தா (7) உலக சாதனை படைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், உலகின் இளம்…

மதுரையைச் சேர்ந்த சம்யுக்தா உலகின் இளம் வயது டேக்வாண்டோ பயிற்சியாளராக கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.

மதுரையை சேர்ந்த சம்யுக்தா (7) உலக சாதனை படைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், உலகின் இளம் வயது டேக்வாண்டோ பயிற்சியாளர் போட்டியில் கலந்து கொண்டார். இந்த உலக சாதனை முயற்சியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த சாதனை படைக்க, அந்த நபர் அனைத்து டேக்வாண்டோ பாடத்திட்டத்தையும் மிகச் சரியாக செய்து காட்ட வேண்டும் மற்றும் பிற மாணவர்களுக்கு குறைந்தது 50 மணி நேர டேக்வாண்டோ வகுப்புகளை எடுத்திருக்க வேண்டும். இதை பதிவு செய்து கின்னஸ் உலக சாதனை குழுவிற்கு அனுப்ப வேண்டும்.

இதையும் படியுங்கள் : “என் மகனின் 10 ஆண்டுக்கால வாழ்க்கையை வீணடித்து விட்டனர்” – தோனி, கோலி உள்ளிட்டோர் மீது சஞ்சு சாம்சனின் தந்தை குற்றச்சாட்டு!

இந்த பதிவு கொரியாவில் உள்ள உலக டேக்வாண்டோ தலைமையகத்தால் சரிபார்க்கப்படும். அனைத்து டேக்வாண்டோ பாடத்திட்டத்தையும் மிகக் குறைந்த வயதில் கச்சிதமாக செய்து காட்டிய மாணவர் இந்த கின்னஸ் உலக சாதனைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார். சம்யுக்தா 270 நாட்களில் கேட்கப்பட்ட அனைத்து டேக்வாண்டோ பாடத்திட்டத்தையும் செய்து காட்டி இந்த சாதனைக்கு தகுதி பெற்று கின்னஸ் உலக சாதனை நிறுவனத்தால் உலகின் இளம் வயது டேக்வாண்டோ பயிற்சியாளர் பட்டத்தைப் பெற்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.