நடிகர் விஜய் தேவரகொண்டா குறித்து நெகிழ்ச்சிப் பதிவு ஒன்றை நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக பல்வேறு படங்களில் நடித்து வருபவர் சமந்தா. இவரது நடிப்பில் கடைசியாக வெளியான ‘யசோதா’ திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், திடீரென மயோசிடிஸ் எனும் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சையின் பலனாக அவருக்கு உடல்நலம் தேறி வந்த நிலையில், அவர் மீண்டும் படப்பிடிப்புகளில் கலந்து கொண்டு நடித்து வருகிறார்.
இந்நிலையில் தெலுங்கில் பிரபல நடிகராக வலம் வரும் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி வரும் ’குஷி’ படத்தில் சமந்தா கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு துருக்கியில் நடைபெற்று வருகிறது.
விஜய் தேவரகொண்டாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமந்தா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் இருவரும் ஹோட்டலில் சாப்பிடும் புகைப்படம் ஒன்றை சமந்தா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில், “ உன்னுடைய சிறந்த நிலையில் உன்னை பார்த்திருக்கிறேன், உன்னுடைய மோசமான நிலையில் உன்னை பார்த்திருக்கிறேன். கடைசியாக வந்ததையும் பார்த்திருக்கிறேன். முதலாவதாக வந்ததையும் பார்த்திருக்கிறேன். உன்னுடைய ஏற்ற இறக்கங்களையும் பார்த்திருக்கிறேன். சில நண்பர்கள் அன்புக்காக மட்டுமே எப்போதும் துணை நிற்பார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.







