தென் கொரியாவில் உள்ள தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் மக்கள் தொடர்பு தூதராக BTS தலைவர் ஆர்.எம் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
உலகளவில் பிரபலமான இசைக்குழுக்களில் தென்கொரியாவைச் சேர்ந்த BTS-ம் ஒன்று. ஜின், சுகா, ஆர்.எம், ஜே-ஹோப், ஜிமின், வி, ஜங்கூக் ஆகிய 7 இளைஞர்களை உறுப்பினர்களாகக் கொண்ட இந்த இசைக்குழு, தனது வசீகர குரலாலும், நடனத்தாலும், உற்சாகமூட்டும் பாடல் வரிகளாலும், பலரது மனங்களையும் கவர்ந்துள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டு அறிமுகமான BTS, ஏராளமான இசை ஆல்பங்களையும், பாடல்களையும் வாரி வழங்கியுள்ளது. பல்வேறு கின்னஸ் சாதனைகளையும், நூற்றுக்கணக்கான விருதுகளையும் அள்ளிக் குவித்துள்ள இந்த இசைக்குழு, கடந்த ஆண்டு ’ப்ரூஃப்’ எனும் ஆல்பத்தை வெளியிட்டது.
RM (@BTS_twt) has been appointed as the Public Relations Ambassador for South Korea's Ministry of National Defense Agency for 'KIA Recovery & Identification' pic.twitter.com/FRyPDQcQNI
— BTS Charts & Translations (@charts_k) June 1, 2023
இரசிகர்கள் ராக் மான்ஸ்டர்-ஆர்எம் என அன்போடும் BTS இசைக்குழுவின் முதன்மை உருப்பினரான ஜூன் தென் கொரியாவில் உள்ள தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் மக்கள் தொடர்பு தூதராக அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.







