பஜ்ரங்கி பைஜான், சுல்தான், டைகர் ஜிந்தா ஹை, கிக், ரேஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள பாலிவுட் நடிகர் சல்மான் கானும், அவரது தந்தை சலீம் கானுக்கும் மர்ம நபர் மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக மும்பை போலீஸிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தினமும் காலையில் ஓட்டப்பயிற்சியை முடித்த பிறகு தான் அமரும் இடத்தில் நடிகர் சல்மான் கான் கடிதம் ஒன்றை கண்டெடுத்து இருக்கிறார். அந்தக் கடிதத்தில் சல்மான் கானின் பெயர் இருந்தது. அதில், சல்மான் கான் மற்றும் அவரது தந்தை சலீம் கானுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தெரிகிறது. பந்த்ரா பேண்ட்ஸ்டாண்ட் அருகே கண்டெடுக்கப்பட்ட கடிதம் குறித்து சல்மான் கான் புகார் அளித்துள்ளார். அதுதொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. மர்ம நபரைத் தேடி வருகிறோம் என்று போலீஸார் தெரிவித்தனர்.
சல்மான் கானின் தந்தை சலீம் கானும் நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது.
-மணிகண்டன்