சேலத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் இருசக்கர வாகனத்திற்கு பாடை கட்டி, ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாட்டின் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயைக் கடந்துள்ளது. இதனை கண்டித்து, சேலம் ஐந்துரோடு பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் மத்திய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெட்ரோல் விலை உயர்வால் சாமானிய மக்கள் இருசக்கர வாகனத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறி வாகனத்திற்கு பாடை கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பெண்கள் ஒப்பாரி வைத்து நூதன முறையில் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.







