நடிகை சாய் பல்லவி நடித்த படம், ஓடிடியில் வெளியாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மலையாளத்தில் வெளியான ’பிரேமம்’ படம் மூலம் கவனிக்கப்பட்டவர் நடிகை சாய் பல்லவி. ’தியா’ படம் மூலம் தமிழில் அறிமுகமான இவர், அடுத்து ’மாரி 2’, ’என்கேஜி’ உட்பட சில படங்களில் நடித்தார். தற்போது தெலுங்கில் கவனம் செலுத்தி வரும் சாய் பல்லவி, அங்கு ராணா ஜோடியாக, விரத பர்வம் என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் அவர் நக்சலைட்டாக நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பிரியாமணி, நந்திதா தாஸ், நிவேதா பெத்துராஜ், ஈஸ்வரி ராவ் உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை வேணு உடுகுலா இயக்கியுள்ளார்.
இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாவதாக இருந்தது. கொரோனா 2 வது அலை காரண மாக ரிலீஸ் தள்ளிப்போனது. இந்நிலையில் ஓடிடி தளம் ஒன்று இந்தப் படத்தை 30 கோடி ரூபாய்க்கு வாங்கி இருப்பதாகவும் விரைவில் இந்தப் படம் அந்த தளத்தில் வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதுபற்றி தெலுங்கு திரையுலகில் பரபரப்பாகக் கூறப்பட்டு வருகிறது. ஆனால், படக்குழு இதுபற்றி அதிகாரபூர்வமாக ஏதும் தெரிவிக்கவில்லை.







