ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 150 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில், ஒவ்வொரு அணியும் போட்டிகளில் வெற்றி பெற தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், கொல்கத்தா ஈடன் கார்டர்ன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதி வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி, குறிப்பிட்ட இடைவெளியில் ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதையும் படியுங்கள் : நடராஜனின் ஒற்றைக் கனவு நனவானது… – சின்னப்பம்பட்டியில் கிரிக்கெட் மைதானம் தயார்!!
இறுதியாக 20 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் 42 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார். அபாரமாக பந்துவீசிய ராஜஸ்தான் வீரர் சஹல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன்மூலம் ஐபிஎல் தொடரில் 184 விக்கெட்டுகள் வீழ்த்திய யுஸ்வேந்திர சஹல், அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் டுவைன் பிராவோவை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்துள்ளார்.







