உலக சுகாதார நிறுவனத்தால் (WHO) தொடங்கப்பட்ட உலக சுகாதார தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7 அன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து இன்று உலக சுகாதார தினம் கொண்டாடப்படுவதையொட்டி பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், “உலக சுகாதார தினமான இன்று, பிறர் சேவைக்காகத் தங்களை அயராது அர்ப்பணித்துக்கொண்டு, ஆரோக்கியமானதொரு பூவுலகை உருவாக்க உழைக்கும் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும், ஆரோக்கியமானதொரு சமூகத்தை கட்டமைப்பதில் எமக்கிருக்கும் உறுதியை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்.
சுகாதார அமைப்புகளை வலுப்படுத்தவும், ஒவ்வொரு தனிநபரின் நலனுக்கும் முன்னுரிமை அளிக்கவும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து தொடர்ந்து பணியாற்றுவோம்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







