நாடாளுமன்ற பணியாளர்களின் புதிய சீருடையில் காவி நிறம், தாமரை சின்னம் இருப்பதால் காங்கிரஸ் குற்றச்சாட்டு
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் செப்டம்பர் 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் செப்டம்பர் 18-ம் தேதி நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் பழைய நாடாளுமன்ற கட்டிடத்திலும், 19-ம் தேதி முதல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்திலும் நடைபெறவுள்ளது.
ஏற்கனவே பழைய நாடாளுமன்ற கட்டிடத்திற்கும், புதிய நாடாமன்ற கட்டிடத்திற்கும் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சிய புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் பணியாற்றும் நாடாளுமன்ற ஊழியர்களுக்கு புதிய டிரஸ்கோட் மற்றும் சீருடை அறிமுகம் செய்யபட்டுள்ளது.
அதன்படி ஆண் மற்றும் பெண் பணியாளர்களுக்கு புதிய சீருடைகள் வழங்கபட்டுள்ளன. இதற்கு முன்னதாக ஆண் பணியாளர்களுக்கு சபாரி சூட் போன்ற உடை வழங்கபட்டுவந்த நிலையில், தற்போது அவர்களுக்கு லேசான காவி நிறத்திலான சட்டையும், அதற்கு மேல் அணிய கூடிய கோர்ட்டும், காக்கி நிறத்தினாலான கால் சட்டையும் வழங்கபட்டுள்ளது. அதே போல் பெண்கள் அணிய கூடிய சீருடையில் சிறிய அளவிலான தாமரை பூக்கள் இடம்பெற்றுள்ளது.
நாடாளுமன்றத்தில் பணியாற்ற கூடிய மார்ஷல் என்று அழைக்கக்கூடிய காவலர்களுக்கு இதற்கு முன்னதாக வெள்ளை நிறத்தால் ஆன சபாரி சூட் போன்ற சீருடை வழங்கபட்டு வந்த நிலையில், தற்போது அவர்களுக்கு குர்தா மற்றும் பைஜாமா போன்ற உடைகள் சீருடையாக வழங்கபட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் பணியாற்ற கூடிய சுமார் 275 பணியாளர்களுக்கும் ஏற்கனவே இந்த சீருடை வழங்கபட்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் எம்பியும் , மக்களவை கொறடாவுமான மாணிக்கம் தாகூர் தனது ‘எக்ஸ்’ வலைதள பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது..
‘நாடாளுமன்ற ஊழியர்களுக்கு வழங்கப்பட இருக்கும் புதிய சீருடையில் ஆளும் பாஜகவின் தேர்தல் சின்னமான தாமரை இடம்பெற்றுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. தேசிய விலங்கான புலி, தேசிய பறவையான மயில் ஆகியவற்றை விட்டுவிட்டு தாமரை சின்னத்தை மட்டும் பொறிப்பதன் காரணம் என்ன? அது பாஜகவின் தேர்தல் சின்னம் என்பதால்தானே?
இந்தத் தவறை மக்களவைத் தலைவர் அனுமதிப்பது ஏன்? நாடாளுமன்றம் என்பது ஒரு குறிப்பிட்ட சார்பைச் சார்ந்தவர்களுக்கு மட்டுமானதல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஜி20 சின்னத்திலும் அவர்கள் இதேபோலத்தான் நடந்து கொண்டார்கள்.
https://twitter.com/manickamtagore/status/1701508171532312598
நாடாளுமன்றத்தை தங்கள் கட்சியின் சின்னமாக பாஜக மாற்ற முயல்வது மிகவும் துரதிருஷ்டவமானது. அரசியல் சாசன அமைப்புகள், அரசு கல்வி நிலையங்கள் என அனைத்திலும் தலையிட்டு தங்களை எப்படியாவது நிலைநாட்டிக் கொள்ள வேண்டும் என்பது அவர்களது நோக்கமாக உள்ளது’ என்று மாணிக் தாகூர் எம்பி தெரிவித்துள்ளார்.







