சச்சின் டெண்டுல்கர் தனது ’50வது பிறந்த நாளை’ எவ்வாறு கொண்டாடினார் என்பதை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
சச்சின் டெண்டுல்கர் ஒரு தீவிர இன்ஸ்டாகிராம் பயனர். அவரின், சமீபத்திய பகிர்வில், தனது 50 வது பிறந்தநாளைக் கொண்டாட அவர் என்ன செய்தார் என்பதைப் பகிர்ந்து கொள்ள ஒரு படத்தை வெளியிட்டார். அவர் தனது மனைவி அஞ்சலி டெண்டுல்கர் மற்றும் மகள் சாரா டெண்டுல்கருடன் நேரத்தை செலவிடுவதை அவரது பதிவு காட்டுகிறது.
“ஒவ்வொரு நாளும் நீங்கள் அரை சதம் அடிப்பது இல்லை, அப்படி நீங்கள் செய்யும் போது, மிகவும் முக்கியமானவர்களுடன் கொண்டாடுவது மிக முக்கியம். சமீபத்தில் ஒரு அமைதியான கிராமத்தில் 50வது பிறந்த நாளை குடும்பத்துடன் கொண்டாடினேன்!” சச்சின் டெண்டுல்கர் எழுதினார். மேலும் தந்து மகன் ‘அர்ஜுன் டெண்டுல்கர்’ ஐபிஎல் காரணமாக இந்த நிகழ்வில் கலந்து கொள்ள முடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த பதிவு பகிரப்பட்டதிலிருந்து, இது ஒரு மில்லியனுக்கும் அதிகமான லைக்குகளைக் குவித்துள்ளது. மேலும் இதன் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த பகிர்வு மக்கள் பல்வேறு கமெண்டுகளை செய்ய தூண்டியது. சிலர் இதய எமோஜிகளின் மூலம் தங்கள் வாழ்த்துகளை வெளிப்படுத்தினர்.







