இந்தியா சார்பில் 500வது கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி விளையாடவுள்ளார். இதன்மூலம், சச்சின், எம்.எஸ்.தோனி, டிராவிட் ஆகியோரின் வரிசையில் விராட்கோலி இடம்பிடிக்கிறார்.
நாளை தொடங்கவுள்ள வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிதான் இந்திய அணி வீரர் விராட் கோலிக்கு ஒட்டுமொத்தமாக 500வது கிரிக்கெட் போட்டியாகும். இது விராட் கோலியின் கிரிக்கெட் வரலாற்றில் முக்கியமான இடத்தை அவருக்கு பெற்றுத்தரும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
12 வருடங்களுக்கு முன் இதே வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விராட் கோலி டெஸ்டில் அறிமுகமானார் . டி20 வரலாற்றில் அதிக ரன்கள் (4008) எடுத்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். வரலாற்றில் அதிவேகமாக 8000, 9000, 10000, 11000, 12000 ரன்களை கடந்த கிரிக்கெட் வீரரும் இவர் தான்.
500-க்கும் அதிகமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய வீரர்கள்:
சச்சின் டெண்டுல்கர் (664 போட்டிகள்), மகிலா ஜெயவர்த்தனே (652), குமார் சங்ககாரா (594), ஜெயசூர்யா (586), ரிக்கி பாண்டிங் (560), எம்.தோனி (538), அஃப்ரிடி (524), காலிஸ் (519), ராகுல் டிராவிட் (509) ஆகியோர் 500க்கும் மேற்பட்ட கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளனர். இவர்கள் வரிசையில் நாளை விராட் கோலி இடம் பெறவுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 2 டெஸ்ட், 3 ஒரு நாள், 5 டி20 கிரிக்கெட் போட்டிகளில் இரு அணிகளும் விளையாடுகின்றன. முதல் டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2வது டெஸ்ட் போட்டி நாளை டிரினிடட்டில் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி நாளை இரவு 7.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. இந்த டெஸ்ட்ன் மூலம் விராட் கோலி தனது 500வது போட்டியை நிறைவு செய்து வரலாற்றில் இடம் பெறுகிறார்.