கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆடி மாத பூஜைக்காக நடை வரும் 16-ம் தேதி மாலை நடை திறக்கப்பட உள்ளதால் ஆன்லைனில் முன்பதிவு தொடங்கியுள்ளது.
கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் ஆண்டுக்கு ஒரு முறை 60 நாட்கள் நடைபெறும் மண்டல , மகர விளக்கு பூஜைகளை தவிர தமிழ் மாதம் பிறக்கும் முதல் நாளன்று மாதம்தோறும் நடை திறக்கப்படும். மேலும் விஷு, ஓணம் பண்டிகை நாட்களிலும், பங்குனி உத்திர திருவிழாவின் போதும் நடை திறக்கப்படும்.
இந்நிலையில் ஆடி மாத பூஜைக்காக வரும் 16ஆம் தேதி மாலை நடை திறக்கப்படுகிறது. அன்று மாலை 5.30 மணியளவில் தந்திரி கண்டரர் ராஜீவரர் முன்னிலையில், மேல்சாந்தி தாமோதரன் நம்பூதிரி நடையை திறந்து ஐயப்பனுக்கு தீபாராதனை நடத்துவார். மறுநாள் 17-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை கணபதி ஹோமம், உஷபூஜை ஆகிய வழக்கமான பூஜைகளுடன் படி பூஜை, உதயாஸ்தமன பூஜை ஆகிய சிறப்பு பூஜைகளும் நடைபெறவுள்ளன.

இதற்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியுள்ளது. 16 ம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை ஆடி மாத பூஜைக்காக பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: