ரஷ்யா- உக்ரைன் நாடுகள் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வேண்டும் : தாலிபான்கள்

ரஷ்யா- உக்ரைன் நாடுகள் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வேண்டும் என தலிபான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசு கருத்து தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் தற்போது ரஷ்யா- உக்ரைன் போர்தான் பேசுபொருளாக இருக்கிறது. போர் தொடர்பாக பல்வேறு…

ரஷ்யா- உக்ரைன் நாடுகள் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வேண்டும் என தலிபான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசு கருத்து தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் தற்போது ரஷ்யா- உக்ரைன் போர்தான் பேசுபொருளாக இருக்கிறது. போர் தொடர்பாக பல்வேறு நாடுகளும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றன. அதில் ஒன்றாக தலிபான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசு, போர் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளது.

இது குறித்து தாலிபான் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷ்யா- உக்ரைன் போர் விவகாரத்தை தாங்கள் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் , பொது மக்களின் உயிரிழப்பு கவலை அளிப்பதாக உள்ளது.

எனவே இது தொடர்பாக இரு நாடுகளும் பேச்சுவார்த்தைக்கு முன்வரவேண்டும். இதற்குமேலும் வன்முறையை அதிகரிக்கும் வகையில் எந்த ஒரு நடவடிக்கையிலும் இரு தரப்பும் ஈடுபடக்கக்கூடாது. மேலும்,அமைதியான பேச்சுவார்த்தையின் மூலம் அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.