பதிவுத்துறை சேவைக் கட்டணம் உயர்ந்ததாக பரவும் செய்தி தவறானது – NewsMeter உண்மை செய்தி சரிபார்ப்பு குழு தகவல்!

This News Fact Checked by NewsMeter‘ பதிவுத்துறையின் சேவைக் கட்டணத்தை தமிழ்நாடு அரசு உயர்த்தியுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவிய செய்தி தவறானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ‘பதிவுத்துறையில் சேவைக் கட்டணங்கள் உயர்வு’ என்ற…

This News Fact Checked by NewsMeter

பதிவுத்துறையின் சேவைக் கட்டணத்தை தமிழ்நாடு அரசு உயர்த்தியுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவிய செய்தி தவறானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

‘பதிவுத்துறையில் சேவைக் கட்டணங்கள் உயர்வு’ என்ற தலைப்பில் Way2news வெளியிட்ட செய்தி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலானது. அந்த செய்தியில், “தமிழக பதிவுத்துறையில் பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்கள் உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.  இது தொடர்பாக வெளியான அரசிதழில்,  ரசீது ஆவணத்திற்கு ரூ.20லிருந்து ரூ.200, தனிமனைக்கான கட்டணம் ரூ.200லிருந்து ரூ.1000,  பிரமாணப் பத்திரப் பதிவு, ஒப்பந்தப் பதிவு கட்டணம் ரூ.20லிருந்து ரூ.2000, செட்டில்மெண்ட்,  பாகம்,  விடுதலை ஆவணங்களுக்கு ரூ.4,000லிருந்து ரூ.10,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உண்மை சரிபார்ப்பு

பதிவுத்துறையில் சேவைக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டது உண்மைதானா என்பதை நியூஸ்மீட்டர் ஆய்வு செய்தது.

அப்போது, ‘ஜூலை 10 முதல் பதிவுத்துறை சேவைக் கட்டணம் உயர்வு: எவ்வளவு?’ என்ற தலைப்பில் 2023 ஆம் ஆண்டு ஜுலை 8-ம் தேதி தினமணி செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது.  அதில், “பதிவுத்துறையால் அளிக்கப்படும் பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்களில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மாற்றம் செய்யப்படவில்லை.  எனவே, பதிவுத்துறையால் வழங்கப்பட்டு வரும் ஆவணப்பதிவு, ப திவு செய்யப்படும் ஆவணங்களைப் பாதுகாத்தல், மின்னணு சாதனத்தில் இருந்து ஆவண நகல்கள் வழங்குதல் போன்ற சேவைகளைப் பொருத்து கட்டண விகிதங்களை மாற்றியமைக்க தமிழக அரசு முடிவு செய்தது.

நாளை(ஜுலை 10, 2023) முதல் புதிய கட்டணம் அமலுக்கு வருகிறது. தமிழ்நாடு அரசின் முடிவின்படி, ரசீது ஆவணத்துக்கான பதிவுக் கட்டணம் ரூ.20ல் இருந்து ரூ.200ஆகவும், குடும்ப நபர்களுக்கு இடையிலான செட்டில்மென்ட், பாகம் மற்றும் விடுதலை ஆவணங்களுக்கு அதிகபட்ச பதிவுக் கட்டணம் ரூ.4,000ல் இருந்து ரூ.10,000 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச முத்திரைத் தீர்வு ரூ.25,000ல் இருந்து ரூ.40,000 ஆகவும், தனி மனை பதிவுக்கான கட்டணம் ரூ.200ல் இருந்து ரூ.1,000ஆகவும் உயர்த்தப்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது. இதே செய்தி மாலைமலரும் 2023 ஆம் ஆண்டு ஜுலை 8-ம் தேதி வெளியிட்டுள்ளது.

தொடர்ச்சியான தேடுகையில், அண்மையில் தமிழ்நாடு அரசு பத்திரப் பதிவுக்கான சேவைக் கட்டணத்தை உயர்த்தியதாக எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை என்பது தெரியவந்துள்ளது. மாறாக, ஒப்பந்தம், பொது அதிகாரம் உள்ளிட்டவற்றுக்கான முத்திரைக் கட்டணத்தை தமிழ்நாடு பதிவுத்துறை உயர்த்தியுள்ளதாக மே 8-ம் தேதி இந்து தமிழ் திசை செய்தி வெளியிட்டுள்ளதும் புலப்பட்டுள்ளது.

இதன்மூலம், 2023 ஆண்டு தமிழ்நாடு பதிவுத்துறை சேவைக் கட்டணத்தை உயர்த்தியது தொடர்பான செய்தி தற்போது தவறாக பரவி வருகிறது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Note : This story was originally published by ‘NewsMeter‘ and republished by ‘News7 Tamil’ as part of the Shakti Collective

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.