முக்கியச் செய்திகள் தமிழகம்

ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு தடை விதிக்க சட்ட ரீதியாக நடவடிக்கை; திருமாவளவன்

ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு தடைவிதிக்க சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என விசிக தலைவர் திருமாளவன் தெரிவித்துள்ளார்.

மத அடிப்படையில் மக்களுக்கு இடையே பகையை ஏற்படுத்தி அமைதியை சீர்குலைக்க நினைக்கும் பிரிவினைவாத சக்திகளை தமிழகத்தில் அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் சார்பில், இன்று தமிழகம் முழுவதும் 500 இடங்களில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி நடைபெறற்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சென்னையில் சிம்சன் பெரியார் சிலை முதல் அண்ணா மேம்பாலம் வரை மனித சங்கிலி நடைபெறுகிறது. இந்த மனித சங்கிலியில், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, மதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு காட்சிகளை சார்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இந்த மனித சங்கிலியில் பங்கேற்றுள்ளனர்.

சுமார் 17 அரசியல் கட்சிகளும் 40ககும் மேற்பட்ட இயக்கங்களும் இந்த மனித சங்கிலி இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இதில் விசிக தலைவர் திருமாவளவன், முத்தரசன், கே.பாலகிருஷ்ணன், வேல்முருகன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இதில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன் கூறுகையில், இந்த அறப்போர் ஒரு நீண்ட நெடிய கருத்திய போருக்கான தொடக்க நிலை. சங்பரிவாரின் கும்பலின் சதி அரசியலை முறியடிப்பதற்கான ஒரு ஒத்திகை தான் இந்த போராட்டம். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத ஒரு அளவிற்கு ஏறத்தாழ ஒரு 80 அமைப்புகள் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றிருக்கிறது.

இந்திய வரலாற்றில் இவ்வளவு இயக்கங்கள் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு எதிர்ப்பு தெரிவித்த மாநிலங்கள் எதுவும் இல்லை. இந்த மண்ணில் சாதியவாதத்திற்கும், மதவாதத்திற்கும் இடம் கிடையாது. சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் மக்களை கூறு போடும் இயக்கத்திற்கு இங்கு இடம் கிடையாது. ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. நவம்பர் 6ம் தேதி ஆர்.எஸ்.எஸ். பேரணியை தடுப்பதற்கு சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறுகையில், தமிழ்நாடு முழுவதும் மனித சங்கிலி போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. நவம்பர் 6ம் தேதி ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அணிவகுப்பு நடைபெற்றதற்கு தமிழக அரசு அனுமதி கொடுக்கக் கூடாது என மனித சங்கிலி வாயிலாக கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பேசுகையில், தமிழ்நாட்டில் மதவாத கும்பலுக்கும், சாதிவாதி கும்பலுக்கும் இடமில்லை என்பதை விசிக தலைவர் திருமாவளவன் தொடங்கி இருக்கிறார்கள் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய சிபிஐஎம் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழ்நாட்டில் சனாதன ஆர்எஸ்எஸ் போராட்டத்திற்கு இடமில்லை என்பதை எச்சரிக்கை விடுவதற்காக சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் நடைபெற்று வருகிறது என்றார்.

தொடர்ந்து பேசிய மதிமுக பொதுசெயலாளர் வைகோ, விசிக, கம்யூனிஸ்ட் போன்ற பல்பேறு அமைப்புகள் சேர்ந்து இன்று சென்னை மாநகரிலே நடத்திய மனித சங்கிலி போராட்டம் என்பது சென்னை மாநகரம் கண்டிராத ஒரு புரட்சிகரமான அணிவகுப்பு. தமிழகத்தில், காமராஜரை கொலை செய்ய முயன்ற கூட்டத்திற்கு இங்கு இடம் இல்லை. இது தந்தை பெரியாரின் மண். இது அம்பேத்கரின், பேரறிஞர் அண்ணாவின் மண் என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பிளவுகள் மறைந்து அதிமுக நிச்சயம் ஒன்றுபடும்- சசிகலா உறுதி

Web Editor

டிச.22ம் தேதி வைகுண்ட ஏகாதசி – ஸ்ரீரங்கத்தில் முகூர்த்தக்கால் நடும் வைபவம்

EZHILARASAN D

“நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினரை பேச அனுமதிப்பதில்லை” – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

Niruban Chakkaaravarthi