‘கிக்’ என்ற படத்தில் நடிகர் சந்தானம் முதல் முறையாகப் பாடியுள்ள பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
பிரபல கன்னட இயக்குநர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் ‘கிக்’ என்ற திரைப்படத்தில் நடிகர் சந்தானம் நடித்து வருகிறார். மேலும் தன்யா ஹோப், ராகினி திரிவேதி, கோவை சரளா உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு அர்ஜுன் ஜான்யா என்பவர் இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் ‘கிக்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் முதல் சிங்கிள் வெளியாகியுள்ளது.
“சாட்டர்டே இஸ் கம்மிங்” என ஆரம்பிக்கும் இந்த பாடலை, நடிகர் சந்தானம் தனது சொந்தக் குரலில் பாடியிருக்கிறார். இப்பாடலைப் பாடலாசிரியர் விவேகா எழுதியுள்ளார். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சந்தானம் முதல் முறையாகப் பாடகர் அவதாரம் எடுத்திருக்கும் இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் பெறும் வரவேற்பைப் பெற்று வருகிறது.







