RSS அமைப்பின் நூற்றாண்டு விழா – சிறப்பு நாணயம் வெளியிட்ட பிரதமர் மோடி..!

டெல்லியில் ஆர்எஸ்எஸின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, நினைவு தபால் தலை மற்றும் சிறப்பு நாணயம் ஆகியவற்றை வெளியிட்டார்.

ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) 1925 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அதன்படி தற்போது ஆர்எஸ்எஸ் தனது  நூற்றாண்டு விழாவை கொண்டாடுகிறது.

இந்த நிலையில் இன்று டெல்லியிலுள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் ஆர்எஸ்எஸின் நூற்றாண்டு விழாவின் சிறப்பு நிகழ்ச்சிக்கு நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி,மத்திய கலாச்சார அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், டெல்லி முதல்வர் ரேகா குப்தா, ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸின் நூற்றாண்டு விழாவை குறிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட நினைவு தபால் தலை மற்றும் வெள்ளி நாணயத்தை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.

இந்த நிகழ்வின் போது வெளியிடப்பட்ட நாணயம் தூய வெள்ளியால் ஆனது. அதன் மதிப்பு ரூ.100 ஆகும். நாணயத்தின்  பின்புறத்தில் பாரத மாதாவின் உருவப்படம்  மூன்று ஆர்எஸ்எஸ் தலைவர்கள் வணங்கும்படியும் , நாணயத்தின் முன் பக்கத்தில் அசோக தூணின் சிங்கத் தலைநகரம் பொறிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.