முக்கியச் செய்திகள் தமிழகம்

அரூரில் ரூ.410 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்கப் பணி!

அரூர் அருகே ரூ.410 கோடி மதிப்பீட்டில் இரண்டு வழி சாலையை நான்கு வழி சாலையாக
அகலப்படுத்தி மேம்பாடு செய்யும் பணியை அமைச்சர் எ.வ.வேலு மற்றும்
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இருவரும் பூமி பூஜை மரக்கன்றுகளை நட்டு கொடி
அசைத்து தொடக்கி வைத்தனர்.

தமிழக முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மாவட்ட தலைநகரங்களை இணைக்கும் வகையிலும் தருமபுரி – திருவண்ணாமலை மாவட்டத்தை இணைக்கும் வகையிலும் தர்மபுரி, அரூர் (வழி) மொரப்பூர் சாலை மற்றும் திருவண்ணாமலை, அரூர் (வழி) தானிப்பாடி சாலை வழியாக உள்ள இரு வழிச்சாலையை விரிவுபடுத்தி நான்கு வழிச்சாலையாக மேம்படுத்த ரூபாய் 410 கோடி திட்ட மதிப்பீட்டில் 48.40 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை விரிவாக்கம் செய்யப்படவுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தற்போது சாலையின் அகலம் 7 மீட்டராக உள்ள நிலையில் போக்குவரத்து
வசதிக்கேற்ப இருவழி சாலையானது 16.20 மீட்டர் அகலமுள்ள நான்கு வழி சாலையாக
மாற்றப்பட்டுள்ளது. இதில் 99 சிறு பாலங்களும், 1.20 கி.மீ மைய தடுப்புச்சுவர், 42 பேருந்து நிறுத்தம் மேலும் சாலையில் மண் அரிப்பு மற்றும் மண் சரிவை தவிர்க்க தேவையான இடங்களில் தடுப்புச்சுவர் அமைக்கப்படவுள்ளது.

வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

இந்தப் பணிகள் அனைத்தும் 16 மாதங்களில் முடிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சாலை விரிவாக்கம் செய்யும் திட்டத்திற்கான பணிகளை பொதுப்பணிகள், நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஏ.வ. வேலு, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், ஆகியோர் கலந்துகொண்டு அரூர் அருகே பொய்யபட்டியில் சாலை விரிவாக்கப் பணிகளைத் தொடங்கி வைத்தனர்.

இதுகுறித்து அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், “அரூரில் இருந்து திருவண்ணாமலை செல்வதற்கு சுமார் 1.45 மணி நேரம் ஆகிறது. இந்த நான்கு வழிச்சாலை வந்துவிட்டால் ஒரு மணி நேரத்திற்குள் திருவண்ணாமலையைச் சென்றடையலாம். தற்போது 48 கிலோ மீட்டர் தூரத்தை நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்கு 410 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது” என்றார். இந்நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

-மணிகண்டன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

திமுக மற்றும் பாஜகவினர் போட்டி முழக்கம்

Ezhilarasan

மிரட்டும் கொரோனா: மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை

Halley Karthik

இரண்டு நாட்களுக்கு தேர்தல் பரப்புரை மேற்கொள்ள ஆ.ராசாவுக்குத் தடை: தேர்தல் ஆணையம்

Halley Karthik