நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் வெளிநாடு செல்ல தடையில்லை – டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

பணமோசடி வழக்கு தொடர்பாக நீதிமன்ற ஜாமீன்  பெற்ற நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் வெளிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடைகளை டெல்லி சிறப்பு நீதிமன்றம் நீக்கியுள்ளது.  ரூ.200 கோடி மிரட்டிப் பறித்ததாக தொடரப்பட்ட வழக்கில் பாலிவுட் நடிகை…

பணமோசடி வழக்கு தொடர்பாக நீதிமன்ற ஜாமீன்  பெற்ற நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் வெளிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடைகளை டெல்லி சிறப்பு நீதிமன்றம் நீக்கியுள்ளது. 

ரூ.200 கோடி மிரட்டிப் பறித்ததாக தொடரப்பட்ட வழக்கில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். போர்ட்டீஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தின் நிறுவனர் சிவிந்தர் மோகன் சிங் மனைவியை மிரட்டி ரூ.200 கோடி பறித்த தாக தொடரப்பட்ட வழக்கில் அமலாக்கப் பிரிவு தாக்கல்செய்த குற்றப்பத்திரிகையில் ஜாக்குலின் பெயர் இடம் பெற்றது.

இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர் குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார் என்று தெரிந்தும், தொடர்ந்து அவருடன் பணபரிவர்த்தனை வைத்துக் கொண்டதாக அமலாக்கப் பிரிவு ஜாக்குலின் மீது குற்றம்சாட்டப்படது.

அதோடு சுகேஷிடமிருந்து ரூ.10 கோடி மதிப்புள்ள பரிசுப்பொருள்களை பெற்றதும் விசாரணையில் தெரியவந்தது. இவ்வழக்கில் ஜாக்குலின் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி இடைக்கால ஜாமீன் பெற்றார்.

ஆனால் நீதிமன்றத்தின் முன் அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேறக்கூடாது என்ற நிபந்தனையுடன் ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஜாமீன் பெற்றார். திரைப்பட நடிகையாக இருப்பதால், ஜாக்குலின் பெர்னாண்டஸ் அடிக்கடி வெளிநாடு செல்ல நேரிடும் என்று நீதிமன்றத்தில் ஜாக்குலின் தரப்பு கூறியது.

இந்நிலையில், ஜாக்குலின் நீதிமன்ற நிபந்தனைகளை தவறாக ஜாக்குலின்  தவறாக பயன்படுத்தவில்லை என்ற அடிப்படையில் ஜாமீன் நிபந்தனைகள் தளர்த்தப்பட்டன. அந்த வகையில், ஜாக்குலின் பெர்னாண்டஸ் அவர் செல்லும் நாடுகள், அவர் தங்கியிருக்கும் காலம் மற்றும் அவர் வசிக்கும் இடம், தொடர்பு எண்கள் போன்ற பிற விவரங்கள் உட்பட அவரது பயணத்தின் விரிவான விவரங்களை வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.