வசூலில் பட்டையை கிளப்பும் “ஜெயிலர்” திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு எப்போது?

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் கடந்த 10ம் தேதி  உலகம் முழுவதும் வெளியானது. தமிழ்நாட்டை…

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் கடந்த 10ம் தேதி  உலகம் முழுவதும் வெளியானது. தமிழ்நாட்டை பொறுத்தவரை 900 மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது.  உலகம் முழுவதும் 4000 திற்கும் அதிகமான திரையரங்குகளில் இப்படம் வெளியானது.

ரஜினிகாந்த் மற்றும் ரம்யா கிருஷ்ணன் இணைந்து நடித்த “படையப்பா” திரைப்படம் பெரிய வரவேற்பு பெற்று இன்று வரை பேசப்படுகிறது. 24 ஆண்டுகளுக்கு பின் “ஜெயிலர்” திரைப்படத்தில் ரஜினி மற்றும் ரம்யா கிருஷ்ணன் இணைந்து நடித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், தென்னிந்திய முன்னணி நடிகர்களான மோகன்லால், சுனில், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, யோகிபாபு உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து இந்த படம் உருவாகி உள்ளது. ஜெயிலர் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார். ஜெயிலர் படத்தில் ரஜினிக்குப் பிறகு ஷிவ ராஜ்குமாருக்கு ரசிகர்களிடையே அமோக வரவேற்பு உள்ளது.

ஜெயிலர் வசூலிலும் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. இப்படம் வெளியாகி ஒரு வாரம் ஆன நிலையில் உலக அளவில் ரூ.350 கோடி வசூலைக் கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஜெயிலர் படம் ஓடிடியில் வெளியாவது குறித்த தகவல் கசிந்துள்ளது. வரும் செப்டம்பர் 7ம் தேதி சன் நெக்ஸ்ட் மற்றும் நெட் ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்த படம் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுகுறித்த எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.