6 முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வியில் படித்து பாலிடெக்னிக், ஐடிஐ செல்லும் மாணவிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில், பட்ஜெட் மீதான பொது விவாதத்திற்கு பதிலுரை வழங்கிய அவர், ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு திட்டங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், உதவித்தொகைக்கான திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், 6 முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வியில் படித்து பாலிடெக்னிக், ஐடிஐ செல்லும் மாணவிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிட்டார். காமராஜர் பெயரில் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும் என தெரிவித்தார்.
கல்லூரிக் கட்டடங்கள் கட்டுவதற்காக பட்ஜெட்டில் ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், கல்லூரி கட்டடங்கள் கட்டும் திட்டத்துக்கு, காமராஜர் கல்லூரி மேம்பாட்டு திட்டம் என பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அதேபோல், சென்னை நந்தனத்தில் உள்ள எம்.சி ராஜா கல்லூரி விடுதியில் 40 கோடி ரூபாய் மதிப்பில் நவீன விடுதி கட்டப்படும் என்றும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு வெளியிட்டார்.