பிப்.2 ஆம் தேதி கூடுகிறது தமிழக சட்டப்பேரவை!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் பிப்ரவரி 2 ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆளுநர் உரையுடன் பிப்ரவரி 2 ஆம் தேதி கூட்டத்தொடர் தொடங்கும்…

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் பிப்ரவரி 2 ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆளுநர் உரையுடன் பிப்ரவரி 2 ஆம் தேதி கூட்டத்தொடர் தொடங்கும் என தெரிவித்துள்ளார். ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்குகிறது. கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இந்தாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் பல்வேறு விசயங்கள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply