முக்கியச் செய்திகள் தமிழகம்

நீர் மேலாண்மைக்கு ரூ.1 லட்சம் கோடி- அன்புமணி ராமதாஸ்

நீர் மேலாண்மைக்கு ரூ.1 லட்சம் கோடியில் திட்டமிட்டுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அளக்குடி திருக்கழிப்பாலை இடையே கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட வலியுறுத்தி பாமக மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் நேரில் பார்வையிட்டு வருகிறார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ், தமிழ்நாட்டில் இருக்கும் மற்ற கட்சிகளுக்கு நீர் மேலாண்மை முக்கியத்துவம் தெரியவில்லை. பாமக நிறுவனர் ராமதாஸ் மட்டுமே நீர் மேலாண்மை முக்கியத்தும் அறிந்துள்ளார். கடந்த 50 ஆண்டுகளாக ஆட்சியாளர்கள் நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் தரவில்லை. கொள்ளிடம் ஆற்றில் 5 கி.மீக்கு தடுப்பணை கட்ட வேண்டும் என ஏற்கனவே பாமக வலியுறுத்தியுள்ளது என்றார்.

மேலும், இப்பகுதியில் தடுப்பணை கட்டினால் கடல் நீர் உட்புகாது. நிலத்தடி நீர் உயரும். தமிழக முதல்வர் ஸ்டாலினை நான் பாமக தலைவராக பொறுப்பேற்று சந்தித்த போது, கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட முதல் கோரிக்கை வைத்ததாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், பாமகவிடம் ஆட்சி இருந்தால் நீர் மேலாண்மைக்கு மட்டும் ரூ.1 லட்சம் கோடியில் திட்டம் வைத்துள்ளோம். காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க செய்ததில் பாமகவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. பெட்ரோ ஹெமிக்கல் மண்டலத்தை டெல்டாவில் அமைக்க கூடாது என போராடி வெற்றி பெற்றோம். இனி வரும் காலங்களில் காலநிலை மாற்ற பிரச்சனையை எதிர்கொள்ளும் நிலை ஏற்படும். விவசாயத்தை அழித்து, மக்களை நாசப்படுத்தும் எந்த திட்டமும் தமிழகத்திற்கு வேண்டாம். நீர் மேலாண்மைக் கு ஒரு இயக்கமாக கட்சி பாகுபாடின்றி நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நெல்லை : அனுமதி பெற்ற குவாரிகள் மட்டுமே செயல்படவேண்டும் – நீதிமன்றம்

Dinesh A

செல்போன் கடையில் புகுந்து பட்டப்பகலில் உரிமையாளரை தாக்கிய வீடியோ வைரல்!

Web Editor

“505 வாக்குறுதிகளில், 208 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

G SaravanaKumar