வலிமை பட அப்டேட் குறித்து ரசிகர் கேட்டதை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன் என இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர் மொயின் அலி தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டரான மொயின் அலி சர்வதேச டெஸ்ட் போட்டியில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார். மேலும், தான் தொடர்ந்து ஒருநாள் மற்றும் டி 20 தொடர்களில் விளையாடுவேன் என தெரிவித்தார். இவர் தற்போது ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில், அவர் டெஸ்ட் போட்டியில் தன்னுடை சிறப்பான அனுபவங்கள் குறித்து பேட்டி அளித்திருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதில், ஒரு குறிப்பிட்ட பகுதியை சென்னை சூப்பர் கிங்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அந்த வீடியோவில் கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் போது தன்னை ரசிகர் ஒருவர் தன்னை அழைத்து ‘வலிமை’ படத்தின் அப்டேட் குறித்து கேட்டார். அதை தன்னால் மறக்க முடியாது என தெரிவித்துள்ளார். இதை இந்திய அணி பந்துயின் பந்து வீச்சாளர் அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘அப்பவே சொன்னேன்’ என சிரித்தபடி இருக்கும் இமேஜிகயோடு ஷேர் செய்துள்ளார்.
Appoveh sonnen.😂😂😂 https://t.co/WhBdu6huhA
— Mask up and take your vaccine🙏🙏🇮🇳 (@ashwinravi99) September 27, 2021